• Apr 28 2024

ஜவான் படம் படைத்த புதிய சாதனை- அதுக்குள்ளே 1000ம் கோடியை நெருங்கி விட்டதா?- செம குஷியில் படக்குழு

stella / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பான் இந்தியத் திரைப்படமாக கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜவான்.இப்படம் வெளியாகி  முதல் ஐந்து நாட்களும் 100 கோடி வசூலை கடந்த பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதேபோல், அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான், ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருந்தது. 


300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்போது  1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு தரப்பில் இருந்து கடைசியாக வெளியான அப்டேட்டின் படி, 954 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய வசூலையும் சேர்த்து, ஜவான் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதனால், ஜவான் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை தமிழ்ப் படங்கள் எதுவும் ஆயிரம் கோடி வசூலை கடந்ததில்லை. ஆனால், முதன்முறையாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லி, பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி சாதனையை செய்து காட்டியுள்ளார். அதேநேரம், அட்லி தனது அடுத்த படத்துக்கும் ரெடியாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement