• May 05 2024

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் _வெளியாகியது அறிவிப்பு. ஹீரோ யார் தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா, ராதிகா சரத்குமார், எமி ஜாக்சன் போன்ற பலர் நடித்ததிரைப்படம் தான் தெறி. இந்த படத்தினை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.



தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் அட்லீ  தற்போது வெளியாகிய ஜவான் என்னும் வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார். இந்தப்படம் பெரும் வரவேற்பை பெற்று பல கோடி வசூலையும் பெற்றுள்ளது.இந்நிலையில் 
2016 ஆம் ஆண்டு வெளிவந்த தெறிபடம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பிற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் தெலுங்கில் இந்த படத்தை உஸ்தாத் பகத் சிங் என்னும் பெயரில் ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர். இந்த படத்தில் ஹீரோவாக பவன் கல்யாண், ஹீரோயினாக ஸ்ரீலீலா மற்றும் ஹீரோவின் அம்மாவாக கவுதமி நடிக்கிறார்கள்.


இந்நிலையில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், விஜய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தை தமிழ் இயக்குனரான கலீஸ் இயக்குகிறார்.


தமிழில் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கிய வெற்றி இயக்குனரான அட்லீ, தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை அவரது "ஏ ஃபார் ஆப்பிள்" தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதுவும் மங்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement