• May 09 2024

கார்த்தியின் விருமன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்- விக்ரம் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கொம்பன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி, இயக்குநர் முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'விருமன்.'இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிப்பதோடு கதாநாயகியாக ஷஹ்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

இப்படத்திற்கு யுவனட் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதோடு ஆக்ஷன் படடாக உருவாகியுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.அத்தோடு இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தோட ரிலீஸ் தேதியால, 'விருமன்' படத்துக்கு சிக்கல்கள் இருக்குறதா சொல்லப்படுது. விக்ரமின் கோப்ரா ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகவிருந்துச்சு. இப்போ சில காரணங்களால அந்த மூவியோட ரிலீஸ் தேதிய மாத்தப் போறாங்களாம். இந்த தகவல் உண்மையா இருந்தா, கோப்ரா ஆகஸ்ட் 31ம் தேதில ரிலீஸாகும்ன்னு சொல்லப்படுது.

அதனால கார்த்தியோட விருமன் படத்த, ஆகஸ்ட் 11ம் தேதியே ரிலீஸ் பண்ணிடலாம்ன்னு படக்குழு பேசிட்டு இருக்காங்களாம்.

விருமன் படத்துக்காக 'கஞ்சாபூவு கண்ணால'ங்குற சூப்பரான ஃபர்ஸ்ட் சிங்கிள் கொடுத்து அசத்துன யுவன், இந்தப் படத்தோட பின்னணி மியூசிக் கம்போஸ் பண்றதுல பிஸியா இருக்காராம். அதனால அவரு மனுச வச்சா தான் விருமன் படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ண முடியும்ன்னு கூறப்படுகின்றது.

இதுக்காக படக்குழு தரப்புல இருந்து யுவன்கிட்டயும் பேச்சுவார்த்தை நடத்தினதா தகவல் கிடைச்சிருக்கு.விருமன் படத்தோட ரிலீஸ் தேதி பத்தி வர்ற அப்டேட்ஸ்லாம், கார்த்தியோட ரசிகர்களுக்கு குழப்பமா இருந்தாலும், படம் சீக்கிரமாவே ரிலீஸாகும்ன்னு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்ன்னு எதிர்பார்க்கப்படுகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement

Advertisement