• May 19 2024

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமல்ஹாசன் குரலில் வரலாற்று தொகுப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது.இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன.

187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதோடு அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி, அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் விளக்கமளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement