• Apr 20 2024

'துணிவு' படத்தில் முக்கிய நடிகர்கள்... ஃபர்ஸ்ட் லுக்கை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் படக்குழு..குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'துணிவு' திரைப்படத்தின், ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அவ்வப்போது படத்தின் முக்கிய தகவலை வெளியிட்டு வரும் படக்குழு, தற்போது 5 நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிரடியாக வெளியிட்டுள்ளனர்.

 நடிகர் அஜித், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. உலகளவில் உள்ள அஜித் ரசிகர்களும், இந்த படத்தின் ரிலீஸுக்காக கார்த்திருக்கின்றனர். 

 

எனினும் இதே நாளில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை தாண்டி, தயாரிப்பாளர்களே விஜய் தான் அஜித்தை விட பெரிய நடிகர், எனவே அவருடைய படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என கூறி வருவது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


அத்தோடு  இரண்டு படக்குழுவினருமே படத்தை புரமோட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்யின் போஸ்டரை 'வாரிசு' படக்குழு ரயில் போன்றவற்றில் ஒட்டி விளம்பர படுத்தினால்... அஜித்தின் துணிவு படக்குழு ஒரு படி மேலே சென்று ஆகாயத்தில், ஸ்கை டைவிங் செய்து விளம்பரப்படுத்தியது திரையுலகினரையே ஆச்சரியப்படுத்தியது.


இவ்வாறுஇருக்கையில்  இன்று, 'துணிவு' படத்தில் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என, படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.


அந்த வகையில் இதுவரை மொத்தம் 5 நடிகர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. அத்தோடு நடிகர் வீரா 'ராதா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான் கோகென் 'க்ரிஷ்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பக்ஸ் 'துணிவு' படத்தில் ராஜேஷ் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரேம் பிரேம் என்கிற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். நடிகர் மோஹன சுந்தரம் மைபா என்கிற கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து பல நடிகர்களின் ஃபர்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  




Advertisement

Advertisement

Advertisement