• May 19 2024

மில்லியன் பார்வையாளர்களை கடந்த தி லெஜெண்ட்; முதல் படத்திலேயே சாதனை படைக்கும் அண்ணாச்சி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் த லெஜெண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் 2022.05.29 அன்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி உட்பட பான் இந்தியா திரைப்படமாக ‘தி லெஜண்ட்’ வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் 25 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படம் ஜூலை 1 இல் திரையரங்குகளில் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாகவும் இது கூறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement