• May 19 2024

வெளியானது முத்தையா முரளிதரனின் ''800'' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ...ஹீரோ யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.கிரிக்கெட் உலகில் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை. அவரது வாழ்க்கை வரலாற்று படம் 800 என்ற பெயரில் உருவாகி வருகிறது.இந்நிலையில் இன்று ( ஏப்ரல் 17 ) முத்தையா முரளிதரன் பிறந்தநாளை முன்னிட்டு 800 பட முதல் பார்வை வெளியாகி உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஹீரோ மதுர் மிட்டல் ஆச்சு அசலாக முத்தையா முரளிதரனைப் போலவே இருக்கிறார். மோஷன் போஸ்டர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பார்வையாளர்களின் ஆரவாரத்தைக் காட்டுகிறது.

விக்கெட் பெயில்கள் பறப்பதும், அவர்களுக்குப் பின்னால் ஹீரோ மதுர் மிட்டல் இருப்பதும் சுவாரஸ்யத்தை பரப்புகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மதுர் மிட்டல் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அது தவிர பல பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார்.

இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது. இப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரித்து உள்ளார்.800 திரைப்படத்தில் முதன்முதலில் விஜய் சேதுபதி, முத்தம்மையா முரளிதரனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி கொண்டார். அவருக்கு பதிலாக பல ஹீரோக்களின் பெயர்கள் 800 படத்தில் நடிக்க பரிசீலினை செய்யப்பட்டது. இறுதியாக இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி சிவரகு, மதுர் மிட்டலை வைத்து படத்தை முடித்து உள்ளார்.


Advertisement

Advertisement