பாரதி கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்- எரிஞ்சு விழுந்த கண்ணம்மாவால் லட்சுமி எடுத்த முடிவு

விஜய்டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் ந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பங்க்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்த சௌந்தர்யா ஒரே இருட்டாக இருக்கிறது நமக்கு முன்னாடி கிளம்பிய பாரதி இன்னும் வீட்டுக்கு வரல போலையே என சொல்லிக் கொண்டிருக்க அப்போது மின்னல் ஒளியில் பாரதி இருட்டில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியடைகின்றனர்.பிறகு எல்லோரும் பாரதி பக்கத்தில் வந்து உட்கார இத்தன வருஷமா எனக்கே தெரியாம என்னை ஏமாற்றி இருக்கீங்க. எனக்கு யார் துரோகம் செய்திருந்தாலும் அதை மறந்திடுவேன் மன்னிச்சிடுவேன் ஆனா என்னுடைய அப்பா அம்மா கூட பொறந்த தம்பின்னு சொந்த ரத்த பந்தமே துரோகம் பண்ணி இருக்கீங்க.

அத்தனை பேரும் முன்னாடி அவ என்னை நிக்க வச்சு கேள்வி கேட்கும் போது என் நடு முதுகுல குத்துன மாதிரி இருந்துச்சு. இப்ப எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க ஹேமா என்னுடைய பொண்ணு அதுல எந்த மாற்றமும் கிடையாது. என்கிட்ட இருந்து ஹேமாவை யாராவது பிரிக்க நினைச்சா அந்த நாள் தான் இந்த உலகத்துல நான் வாழ்கிற கடைசி நாளாக இருக்கும்.

இப்பவே என் பொண்ண கூட்டிகிட்டு இந்த உலகத்துல கண் காணாத இடத்துக்கு போய் என்னால வாழ முடியும். ஆனா அவ இந்த வீட்ல இருக்க எல்லாரும் மேலேயும் ரொம்ப பாசமா இருக்கா. அவளுக்கு பாப்பா பாட்டு சித்தப்பா சித்தி நீ எல்லாரும் வேணும் அதற்காக மட்டும் தான் நான் இங்கே இருக்கேன் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். பாரதியின் இந்த பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த பக்கம் லட்சுமி உண்மையாகவே ஹேமாவின் அம்மா தன்னுடைய அம்மா தானா என்ற சந்தேகத்தில் இது பற்றி கண்ணம்மாவிடம் பேச அவர் எரிந்து விழுகிறார். இதனால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது. அப்போ ஹேமாட அம்மா யாருனு நானே தேடி கண்டுபிடிக்கிறேன் என முடிவு செய்கிறார்.

இந்தப் பக்கம் ஹேமா தூங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் வந்த பாரதி ஹேமாவுடனான நினைவுகள் அனைத்தையும் அசை போடுகிறார். நீ இல்லாம என்னால இந்த உலகத்துல வாழ முடியாது யாருக்காகவும் எதுக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன். உன்னையும் என்னையும் பிரிக்க வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் என பேசுகிறார். ஹேமா தூக்கத்தில் தன்னுடைய அம்மா அழகாக இருப்பதாகவும் அம்மாவை காட்டிய பாரதிக்கு நன்றி எனவும் கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்