பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, காந்திமதி ராஜியைப் பார்த்து கோமதி போன் எடுத்தாலா என்று கேட்கிறார். அதுக்கு ராஜி இல்ல என்று சொன்னவுடனே காந்திமதி தனக்கு என்னவோ தப்பாத் தோணுது என்று சொல்லிட்டு அழுகிறார். பின் கதிர் எல்லாக் கோவிலிலையும் தேடிப் பார்த்திட்டேன் ஆனா, அம்மா இல்ல என்கிறார். அதைக் கேட்ட உடனே காந்திமதி எனக்கு பயமா இருக்கு என்கிறார்.
அதனை அடுத்து அரசி கதிரைப் பார்த்து அம்மாச்சி சொன்ன மாதிரி அம்மா எங்கயாவது போய்ட்டாங்களோ என்று கேட்கிறார். இதைக் கேட்ட கதிர் அம்மா கடைக்கு வந்தாங்களா என்று பாண்டியன் கிட்ட கால் பண்ணிக் கேட்கிறார். அதுக்கு பாண்டியன் அவள் எதுக்கு இங்க எல்லாம் வரப்போறாள் என்கிறார். அதைத் தொடர்ந்து கதிர் கோமதியைக் காணேல என்று பாண்டியன் கிட்ட சொல்லுறார்.

அதைக் கேட்ட பாண்டியன் ஷாக் ஆகி, உடனே கடையை மூடிட்டு வீட்ட கிளம்புவோம் என்கிறார். மறுபக்கம், காந்திமதி தப்பான முடிவேதும் எடுத்திடுவாளோ என்று எனக்கு பயமா கிடக்கு என்று சொல்லிப் புலம்புறார். பின் செந்திலும் பதற்றத்தோட வீட்ட வந்து அம்மா எங்க என்று கேட்கிறார். அதனை அடுத்து காந்திமதி எல்லாரும் இனி கோமதியை மறந்திடவேண்டியது தான் என்று சொல்லி அழுகிறார்.
இதையெல்லாம் கேட்ட கதிர் நீங்க இவ்வளவு நாளா கதைக்கல என்று அம்மா எவ்வளவு பீல் பண்ணாங்க தெரியுமா என்று சொல்லிப் பாண்டியனைப் பேசுறார். மேலும், என்ர அம்மாவுக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற உரிமை இல்லையா என்று கோபமாக கேட்கிறார். மறுபக்கம் செந்திலும் தன்ர பங்கிற்கு பாண்டியனைப் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!