சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மொட்டைமாடியில் முத்து, ரவி மற்றும் மனோஜ் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் பெண் பார்க்கச் சென்ற சம்பவத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பருக்கும் அதேபோன்ற அனுபவம் நடந்ததாக கூறி ரவி மற்றும் மனோஜை குழப்புகிறார் முத்து .
இதற்கிடையில், விஜயா வீட்டிற்கு புதிய பணிப்பெண் ஒருவர் வேலைக்கு வருகிறார். அவர் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்றும், சனி, ஞாயிறு விடுமுறை வேண்டும் என்றும், சட்ட விதிகள் அனைத்தும் தெரியும் என்றும் கூறி பல நிபந்தனைகளை முன்வைக்கிறார்.
மேலும் வீட்டில் மருமகள்கள் இல்லாமல் மகன்கள் மட்டுமே இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். இதனால் விஜயாவும் அவர் சரியாக இருக்கமாட்டார் என்று நினைக்க, அந்த பணிப்பெண்ணும் வேலை ஏற்காமல் சென்று விடுகிறார்.

மற்றொரு பக்கம், ரெஸ்டாரண்டில் ரவி புதிய டிஷ் ஒன்றை செய்து ஸ்ருதியை சாப்பிட்டு பார்க்கச் சொல்லுகிறார். ஸ்ருதியும் அது மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டுகிறார்.
அப்போது அங்கு வரும் மீனா, நீத்து புதிதாக ஒரு பூக்கடை ஆரம்பித்ததாகவும், அதற்கு சிந்தாமணி உதவி செய்ததாகவும், அந்தக் கடைக்கு ரவியின் பெயரை வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.
இதைக் கேட்டு ரவியும் ஸ்ருதியும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் இதைப் பற்றி விஜயாவிடம் சொல்லி சிந்தாமணியிடம் பேசச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!