• Mar 29 2024

'பகாசூரன்' படத்தைப் பாராட்டிய இயக்குநர்.. முதலில் படத்தைப் பார்த்திட்டு பேசுங்க.. வெடித்தது புதுச் சர்ச்சை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் 'பகாசூரன்'. செல்ஃபோனும், அதில் உள்ள டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறையினரை, அதிலும் குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பது தான் இப்படத்தினுடைய கதையாகும்.


பகாசூரன் படத்திற்கு முன்பு மோகன்.ஜி இயக்கிய 'பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி' போன்ற படங்கள் குறித்து சாதி ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. அந்த பாணியில் தற்போது பகாசூரன் படம் குறித்தும் சர்ச்சை கலந்த விமர்சனம் எழுந்துள்ளது.


இந்நிலையில் இந்தியில் 'பாம்பே வெல்வெட், கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர், மர்மெர்சியான்' போன்ற படங்களை இயக்கியவரான அனுராக் கஷ்யப், "பகாசூரன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெற்கிலிருந்து வரும் செய்தியின் மூலம் நான் கேள்வியுற்றேன். எனது நண்பர் நட்டி மற்றும் இயக்குநர் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து சமூகத்தில் வெளிப்படையாக முற்போக்கு கருத்துக்களை பேசும் அனுராக் கஷ்யப் சாதி ரீதியாக தவறான கண்ணோட்டத்தில் படங்களை எடுக்கும் இயக்குநரின் படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளதாக அனுராக் கஷ்யப்பை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். 


அதாவது அனுராக் கஷ்யப் படத்தை பார்க்காமல் அதுகுறித்து வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாகவும், விவரம் தெரியாமல் படம் குறித்து பாராட்ட வேண்டாம் என்றும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர். மேலும் நீங்கள் உங்கள் நண்பர் நட்டிக்காக ட்வீட் போட்டிருப்பது தெரிகிறது என்றும் கூறி அவரை விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement