• Apr 01 2023

'எதிர் நீச்சல்' சீரியல் வெற்றிக்கு காரணமே இவங்க தானாம்.. பிறகென்ன நந்தினியே சொல்லிட்டாங்கப்பா..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது தொடர்ந்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் பிரபலங்கள் சமீபத்தில் ஒரு ஆண்டு நிறைவு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.


இந்த சீரியலில் இயக்குநராக திருச்செல்வம் இருந்து வருகிறார். மேலும் சீரியலின் கதை ஆசிரியராகவும் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் நடிகை ஸ்ரீ வித்யா இருந்து வருகிறார். அத்தோடு ஒளிப்பதிவாளராக சந்தானம் இருந்து வருகிறார்.


இவர்கள்தான் இந்த சீரியலில் உடைய வெற்றிக்கு உண்மையான காரணமாக இருக்கிறார்கள் என்று இந்த சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.


அதாவது இந்த சீரியலில் கதாநாயகிகள் அனைவரும் அதிகமாக மேக்கப் இல்லாமல் நடிப்பது இந்த சீரியலுக்கு ஒரு முக்கியமான ப்ளஸ் ஆக இருந்து வருகிறது. எந்த இடத்திலும் எதார்த்தமான ஒரு சூழ்நிலையை காட்டி வரும் இந்த சீரியலின் பின்னாடி இருந்து வேலை செய்பவர்கள் இவர்கள்தான். 


இவர்களால்தான் இந்த சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களை விரும்பி ரசிக்க வைத்திருக்கிறது. மேலும் எதார்த்தமான வசனம் மற்றும் அதிக ஓவர் ஆக்டிவ் இல்லாத வசனத்திற்கு காரணம் இவர்தான், அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் நடிகைகள் அதிகளவில் மேக்கப் போடாவிட்டாலும் அந்த இடத்தில் கேமராவின் உதவியோடு குவாலிட்டியை கொடுப்பதற்கு சந்தானம் தான்" என்றும்குறிப்பிட்டுள்ளார் நடிகை ஹரிப்பிரியா.


Advertisement

Advertisement

Advertisement