• Aug 03 2025

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய உயர்ந்த மேடைகளாக உருவாகியுள்ளன.


இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சரிகமப 5வது சீசனில் பிரபல நடிகை தேவயானியின் மகளான இனியா கலந்துகொண்டுள்ளார். ஆடிஷனில் மறைந்த பாடகி பவதாரணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு..." பாடலை பாடிய இவர் நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


பின்னர் தேவயானியை மேடையில் பார்த்த நடுவர்கள் முதலில் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இந்த மேடையை இனியாவுக்கு அவர் ஏன் தேர்வு செய்தார் என கேட்டபோது தேவயானி "இந்த மேடை எல்லாருக்கும் ஈஸியா கிடைக்காது. என் மகள் அவளுடைய சொந்த முயற்சியால் மேலே வரவேண்டும் என்பதே என் ஆசை. அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினேன்," என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement