• Jan 19 2025

இலங்கைக்கு பறக்கும் கோட் படக்குழுவினர்.. எந்த இடத்தில் ஷூட்டிங் தெரியுமா? கசிந்த தகவல்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் படம் தான் கோட். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாத், அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

கோட் படத்தின் படப்பிடிப்புகள், டப்பிங் பணிகள் என்பன 90 விதத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இதன் படப்பிடிப்புகள் ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை, பாண்டிச்சேரி என மாறி மாறி நிறைய இடங்களில் நடைபெற்று உள்ளது.


இந்த நிலையில், கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் இலங்கை செல்ல உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, இலங்கையில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லி வந்த நிலையில், தற்போது அதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, இலங்கை கிரிக்கெட் மைதானத்தின் சில காட்சிகளை படமாக்கி அதை திருவனந்தபுரத்தில் எடுத்த காட்சியோடு இணைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement