• Apr 28 2024

திரையரங்கிற்கு லட்சக் கணக்கில் அபராதம் விதித்த நீதிமன்றம்... எல்லாத்துக்கும் காரணம் அஜித் படம் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் 'தல' என்று சிறப்பாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 60இற்கு மேற்பட்ட படங்கள் உருவாகி உள்ளன. இவரின் எந்தப் படம் வெளியானாலும் அந்தப் படத்திற்காக காத்துக் கிடக்கும் ரசிகர்கள் கூட்டமோ ஏராளம்.  

இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் முதல்முதலாக அவருடன் பணியாற்றி இருக்கின்றார் அஜித். மேலும் போனி கபூர், ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் 'வலிமை'படத்தை தொடர்ந்து தற்போது 'துணிவு படத்திலும்' நடித்துள்ளார். 


ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த 'துணிவு' படத்தைப் போலவே 'நேர் கொண்ட பார்வை' படத்தையும் பிரமாண்டமாக போனி கபூரே தயாரித்திருந்தார். 

அந்தவகையில் கடந்த 2019ஆம் ஆண்டு 'நேர்கொண்ட பார்வை' படமானது வெளியாகி இருந்தது. மாறுபட்ட கதைக்களத்தை கொண்டமைந்த இப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்த அஜித்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். 


அதுமட்டுமல்லாது இப்படத்திற்கான ரூ. 100 விலையுள்ள டிக்கட்டை ரூ. 525 க்கு விற்பனை செய்ததாக குன்றத்தூர் பரிமளம் திரையரங்கத்தின் மீது காசிமாயன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரூ. 100 விலைக்கு விற்கப்பட வேண்டிய டிக்கட்டை ரூ. 525க்கு விற்பனை செய்ததற்காக பரிமளம் திரையரங்கிற்கு ரூ. 1,20,425 அபராதமாக செலுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement