• May 14 2024

தளபதி 67 படத்தில் லோகேஷுடன் இணைந்த பிரபலம் - அடடே இவரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கான போஸ்டர் வெளியாகியது கலவையான விமர்சனங்களை பெற்றன இருப்பினும் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலை ஒட்டி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தைக் கொண்டாட தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் முழுமூச்சுடன் நடைபெற்று வருகின்றது. முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறும் இடங்கள் தற்போது ரகசியமாக உள்ளது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக விஜய், தனது 67-வது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைய உள்ளார். இந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்க உள்ளதாகவும், விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தில் 40வயது கேங்ஸ்டராக விஜய் நடிப்பதாகவும் அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தில் சமந்தா ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்திற்கு திரைக்கதை எழுத லோகேஷ் கனகராஜ் உடன் ரத்னகுமார் இணைந்திருக்கிறார் என தகவல் தற்போது பரவி வருகிறது. மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக லோகேஷ் உடன் ரத்ன குமார் பணியாற்ற இருக்கிறார்.

மாஸ்டர், விக்ரம் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ரத்னகுமார் - லோகேஷ் மீண்டும் கூட்டணி சேரும் தளபதி 67 படம் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement