• May 19 2024

"இந்த கஷ்டமான நேரத்துல தப்பா பரப்புறதை நிறுத்துங்க " மீனாவின் லேட்டஸ்ட் பதிவு…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக திகழ்பவர் நடிகை மீனா.இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, அஜித், பிரபுதேவா, பார்த்தீபன் உள்ளிட்ட பலருடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறாகப் பல வெற்றிப் படங்களில் தொடர்ந்தும் பிஸியாக நடித்து வந்த நடிகை மீனா 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகினார்.

இவர்களுக்கு தற்போது நைனிகா என்ற அழகான மகள் ஒருவரும் உண்டு. இவரும் தனது தாயைப் போலவே சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாகக் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 28ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மீனா ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

எனது அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள். இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement