• Dec 04 2024

தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த வழக்கு! நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ? அதே அளவுக்கு விமர்சனங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மெகா பட்ஜெட் படங்கள், மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் விமர்சனங்களே இல்லாமல் ரசிகர்களை சென்றடைந்தாலும், சிறு பட்ஜெட் படங்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது விமர்சனங்கள் மட்டுமே. 


திரைப்படங்களை விமர்சனம், யூடியூப் ,பேஸ்புக், ட்விட்டர் மூலம் சிலர் திரைப்படம் பார்த்து கொண்டே இருக்கும் போது தங்களின் விமர்சனங்களை கூறுகிறார்கள். இதுபோன்ற விமர்சனங்களால் தான், பிக் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் 2,  கங்குவா, போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்களை கடந்து ரசிகர்களை சென்றடையவில்லை என ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை கடந்து பல படங்களை ரசிகர்கள் வெற்றிபெற வைத்துள்ளனர் என கூறுகிறார்கள். 


திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி ஏற்கனவே திரையரங்குகளில் திரைப்படம் குறித்து கருத்து கேட்க வருபவர்கள் யாரும் உள்ளே  அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்கு பின்னரே அந்த படம் குறித்த விமர்சனம் வெளியாக வேண்டும் என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாமே தவிர, விமர்சகர்களின் விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை இடைநிறுத்த முடியாது. என்பதால்  இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement