• Apr 28 2024

துளியளவு கூட மேக்கப் போடாமல் நின்ற கோலத்தில் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்..! எப்படிப் பார்த்தாலும் இந்தப் பொண்ணு அழகாக இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரித்விகா.

இவர் நடிப்பில் உருவாக்குகின்ற படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டதாக அமைந்திருக்கின்றன.


என்னதான் வித்தியாசமான கதைக்களத்தை மையமாக கொண்டிருந்தாலும் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை கண்முன் கொண்டுவந்து ரசிகர்களை கவர்ந்து விடுவதில் வல்லவராக இருக்கின்றார் ரித்விகா.

மேலும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர் தன்னுடைய திறமையான அணுகுமுறையால் அந்த சீசனின் பிக்பாஸ் வின்னர் ஆனார் அம்மணி.


அத்தோடு தமிழ் சினிமாவில் முக்கியமான தவிர்க்க முடியாத இயக்குநராக இருக்கும் பாலாவின் இயக்கத்தில் உருவான 'பரதேசி' என்ற திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்தப்படமே இவருடைய அறிமுகப் படமாகவும் இருக்கின்றது.  

அதனை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கபாலி, மெட்ராஸ்' போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றார். மேலும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்திலும் தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையின் காரணமாக ஏராளமான ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றார்.


இவ்வாறாக திரையுலக ஆரம்பத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கமாக ஈர்த்து வருகிறார். இதுவரை துளிகூட கவர்ச்சி காட்டாமல் வலம்வந்த ரித்விகா சமீபகாலமாக கிளாமர் குயினாகவும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.


இந்தநிலையில் இவர் தற்போது துளியளவு கூட மேக்கப் போடாமல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். இவ்வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement