• Jan 09 2026

இன்ஸ்டாவை அலறவைத்த குழந்தை முகம்.! “Go way back”... அந்த ஹீரோயினி யாருன்னு பாருங்களேன்..!

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

இன்று (ஜூன் 6, 2025) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “Go way back” என்ற ஒரு கேப்ஷனுடன், சிறு குழந்தையாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. அந்தப் படம் தற்பொழுது இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் என அனைவரும் அந்தப் புகைப்படத்திற்கு பல்வேறு வகையான கமெண்ட்ஸினைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்தப் புகைப்படத்தில் ராஷ்மிகாவிற்கு வயது சுமார் 3 அல்லது 4 இருக்கும் எனத் தோன்றுகிறது. அவர் ஒரு மழலை குழந்தையாக, பளபளக்கும் கண்களுடன், நக்கல் சிரிப்புடன் காணப்படுகின்றார். அவர் அணிந்திருந்த சிறிய உடை, கூந்தலின் அமைப்பு மற்றும் எளிமையான அழகு… இவை அனைத்தும் ரசிகர்களின் மனதில் “இது நம்ம ராஷ்மிகாவா?” என்ற சந்தேகத்தையும், அதே நேரத்தில் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் புகைப்படத்திற்கு கீழே ரசிகர்கள் “Little National Crush..." என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது அந்தப் படத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள அன்பைக் காட்டுகின்றது. "Go Way Back" என்று பகிர்ந்த இந்த குழந்தைப் பருவ புகைப்படம், கொஞ்ச நேரத்திலேயே 1 மில்லியன் லைக்குகளைத்  தாண்டியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல, ராஷ்மிகாவின் திரையுலக நண்பர்களும் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement