சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் இரண்டு வாரங்களில் 525 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதனால் உற்சாகமான சூப்பர் ஸ்டார், தனது 170 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெடியாகிவிட்டார். 'ஜெய்பீம்' புகழ் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற தலைவர் 170 பூஜையில், ரஜினி, லைகா சுபாஸ்கரன், இயக்குநர் தசெ ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக தெரிகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தார் லைகா சுபாஸ்கரன். அப்போது அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த சுபாஸ்கரன், இன்று தலைவர் 170 படத்துக்கு பூஜை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நேற்று ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடினார் ரஜினிகாந்த். அப்படியே அதே வைபில் தலைவர் 170 பூஜையில் கலந்துகொண்டுள்ளார். தலைவர் 170 படமும் 'ஜெய்பீம்' போல சமூகத்துக்கான முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வுப் பெற்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடிக்கவுள்ளாராம். மேலும், இதில் முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் டைட்டில் 'வேட்டையன்' எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நானி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!