• May 20 2024

அடேங்கப்பா...நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயிலே திரைப்படத்தில், மாநிறத்தில், தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி அனைவரையும் வசியம் செய்தவர் ராதிகா. இன்று வரை இவர் நடித்த அந்த பாஞ்சாலி கதாபாத்திரம் பேசும் பொருளாகவே உள்ளது. நடிகர் சுதாகருடன் இவர் நடித்த இந்த படம் வெற்றி பெற்று ஹிட்டடித்து ராதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.


முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய ராதிகாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தன. நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் நடித்த அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. 


தமிழ் சினிமாவின் ரஜினி , கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.தற்போது விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, அருண்குமார் என பல டாப் நடிகர்களுக்கு அம்மாவாக தற்போது வரை நடித்து வருகிறார்.


இன்று 61வது கொண்டாடி வரும் ராதிகா சரத்குமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. கார் விரும்பியான ராதிகா, range rover, வெள்ளை நி audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car, சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வைத்து இருக்கிறார்.


தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ராதிகா படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கோடிக்கணக்கில் பேக்ங் பேலன்ஸ் வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அவரின் சொத்து மப்பு ரூ. 100 - 120 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement