• Jan 15 2025

தங்கலான்னா யாரு? இவரு மாதிரி நடிகர் தான் வேணும்... செய்தியாளர் சந்திப்பு-பா. ரஞ்சித் பேச்சு...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படம் ஓர் வரலாற்று திரைப்படமாகும் நடிக்க சொன்னால் கதாபாத்திரமாகவே வாழும் ஓர் நடிகர் படையை தேர்ந்தெடுத்திருக்கும் ரஞ்சித் ரசிகர்கள் அனைவர்க்கும் திரையில் பெருவிருந்தொன்றை தர காத்திருக்கிறார்.


இந்நிலையில் நாளைய தினம் வெளியாகவுள்ள 'தங்கலான்' படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று செய்தியாளர்கள்  மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம் பெறுகிறது. இந்த பிரஷ்மீட்டில் இயக்குனர் ரஞ்சித் இவ்வாறு கூறியுள்ளார். 


நாளைக்கு படம் ரிலீஸ் எல்லாருமே ரொம்ப சப்போட் பண்ணிட்டு இருக்கீங்க. சியான் சார் கூட ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோசம். இந்த மாதிரி ஒரு நடிகன் இருந்தால் எப்படி பட்ட படத்தினையும் அழகா எடுத்துவிடலாம். நேற்று கூட நான் பைனல் கோப்பி பார்க்கும் போது அவ்வளோ நல்லா எல்லாரும் நடிச்சி இருக்காங்க. சூப்பரான வைப் வருது. 


நடிகர்கள் மட்டுமன்றி சப்போட்டிக்கு நடித்தவர்கள், தொழிநுட்பரீதியில் உதவியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி கடுமையா ஒர்க் பண்ணியிருக்காங்க. தங்கலான் அப்பிடிக்கிறது ஒரு வரலாறோடு அரசியலையும் சேர்த்து கொடுத்திருக்கேன். இந்த படம் ஒரு  புதுவிதமானதாக இருக்கும் கட்டாயம் எல்லாரும் பாருங்க என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement