• Feb 02 2023

தளபதி 67 படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ..இதை யாரும் எதிர்பார்க்கலையே..!

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய்யின் நடிப்பில் சமீபத்தில்  வெளியான திரைப்படம் தான் வாரிசு . வம்சியின் இயக்கத்தில் தமனின் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்னதான் விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.அத்தோடு  விக்ரம் படத்திற்கு பின்னர் லோகேஷ் விஜய்யை இயக்கவுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

 இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றது.எனினும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல் வந்தது.

அத்தோடு  இப்படம் முழுக்க முழுக்க லோகேஷியின் ஸ்டைலில் உருவாகவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எதுவும் அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை.



 இப்படத்தில் மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிப்பதும் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement