தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்டுள்ளன.
அதன்படி மாஸ்கோவில் கடந்த 2004ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம் குறித்த கதை அம்சம் என்பது தெரிய வருகிறது. தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் மாஸ்கோ மெட்ரோ ரயிலில் சுரங்க பாதையில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதனால் ஏகப்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவத்தை துப்பறியும் விஜய் குற்றவாளிகளை எப்படி பிடிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்றும் ‘கோட்’ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனங்கள் கதை சுருக்கமாக விளம்பரம் செய்துள்ளன.
‘கோட்’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த கதை சுருக்கத்தையும் பார்க்கும் போது இந்த கதை உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இந்த படப்பிடிப்பு நடந்த நிலையில் சென்னையை மாஸ்கோவாக மாற்றி இருக்கும் காட்சிகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோட்’ முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!