• May 19 2024

இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவுக்கு புதிய கார் ஒன்றினைப் பரிசளித்த தல அஜித் -அட இது எப்போ நடந்தது

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் எஸ். ஜே சூர்யா. இப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜோதிகா சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கின்றார். இப்படமும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கிய இவர் தற்பொழுது நடிகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் டான் மாநாடு போன்ற திரைப்படங்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திக்கின்றார். இப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய மதிப்பானது ரசிகர்களிடையே உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஓர் பேட்டியில் கலந்து கொண்டு பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது நடிகர் அஜித் வாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வாங்கித் தந்ததாகக் கூறியுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியது.

இதே போல சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கமல்ஹாசன் புதிய கார் வாங்கிக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement