• Mar 14 2025

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின்: தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியாகிய புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி தியேட்டரில் திரையிடப்பட்டபோது அல்லு அர்ஜுன் அங்கு படத்தினை பார்வையிட வந்தமையினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார்  இன்று கைது செய்தனர்.


அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், விசாரணைக்காக அல்லு அர்ஜுனை அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்ட பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


கீழ் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தெலங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement