• Jan 08 2025

கோலிவுட்டில் சூடு பிடிக்கும் விவாகரத்து.. ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியும் லிஸ்டில் இணைந்தாரா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தமிழ்த் திரை பிரபலங்களின் விவாகரத்து தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 

சீனு ராமசாமி நேற்றைய தினம் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் மனைவியை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவராக காணப்படுகின்றார். 'அவள்' என்ற சீரியலில் நடித்து அவர் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

d_i_a

இதை தொடர்ந்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு நாச்சியார் என பல சீரியல்களில் நடித்தார். இவர் சீரியலில் நடிக்கும் போதே தன்னுடன் இணைந்து நடித்த சோபியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.


இவ்வாறு சீரியல்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இவர் மை டியர் டயானா என்ற இணைய தொடரிலும், பி. கே விஜய் இயக்கும் வெப் தொடரிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், மணிகண்டன் தனது மனைவியை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. எனினும் இது  தொடர்பில் மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதியினர் எந்த ஒரு அதிகார்வ பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவே இது வதந்தியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement