• Jan 15 2025

ஒரே நாளில் சாதித்துக் காட்டிய தங்கலான்.. முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். 

100 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. கி.பி  1890 ஆம் ஆண்டு காலங்களில் கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினார்கள், அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள், அதிலிருந்து எவ்வாறு மீண்டு தங்கத்தை எடுக்கின்றார்கள் என்பதுதான் தங்கலான் படத்தின் கதையாக உள்ளது. இந்த படத்தை வரலாற்று பின்னணியில் உருவாக்கியுள்ளார் பா.ரஞ்சித்.

இந்த படத்திற்கு பெரிய பலம் என்றால் அது ஜிவி பிரகாஷின் இசைத்தான். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை படத்தினை உலக தரத்திற்கு கொண்டு செல்ல பெரும் உழைப்பை  செலுத்தியுள்ளார்.


இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான தங்கலான்  திரைப்படம் முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் 26. 44 கோடிகளை பெற்றுள்ளதாக தற்போது அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் முதல் நாள் வசூலை அதிகம் பெற்ற படமாகவும், விக்ரம் நடிப்பில் வெளியான படத்தின் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்த படமாகவும் தங்கலான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement