• Jan 19 2025

'தமிழக வெற்றி கழகம்'... அரசியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய்! அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ..

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் புதிதாக தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு இன்றைய தினம் பெயர் வைக்கப்படும் என கூறிய நிலையில், அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு உள்ளது. 

இந்த பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கிறார். 

இதன்மூலம் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய். இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கை வருமாறு,


அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும். என் பணிவான வணக்கங்கள். ''விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. 

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.


ஒரு தன்னலமற்ற வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" ( பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.



Advertisement

Advertisement