• Jan 19 2025

சந்தானத்தின் நகைச்சுவை இறுதிவரை ஒர்க் அவுட் ஆனதா? வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முழு விமர்சனம்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

கடந்த ஆண்டு வெளியான டிக்கிலோனா திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதை இயக்கிய கார்த்திக் யோகியுடன் மீண்டும் வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்காக சந்தானம் இணைந்தார்.

டிக்கிலோனா படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் கவுண்டமணியின் காமெடியை ஞாபகப்படுத்தும் விதமாக, குறிப்பாக வடக்குப்பட்டி ராமசாமி  என்ற வார்த்தையை தலைப்பாக வைத்தே இந்த படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.


இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

1960களில் நடக்கும் காலகட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படம் நகர்கிறது. வடக்குப்பட்டி  என்ற சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. 

குறித்த கிராமம் அனைத்து பக்கங்களிலும் நீர் நிலைகளால் சூழப்பட்டு காணப்படுகிறது. கிராமத்திற்கு உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு பாலம் தான் காட்டப்படுகிறது. சின்ன கிராமமாக இருந்தாலும் அங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ளது. 

அதன்பின் ஒரு ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த கிராமமே பாதிக்கப்பட்டு பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதன்போது அங்குள்ள மக்களை அவர்களின் காவல் தெய்வம் தான் பாதுகாப்பதாக மக்கள் நம்ப, அந்த கிராமத்தில் ராமசாமி என்ற ஏழை குயவன், ஏற்கனவே தனது அப்பாவை இழந்த நிலையில், அம்மாவுடன் அங்கு வருகிறார். மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த இவர்கள், அங்கு வர ராமசாமியின் பானையை திருடன் ஒருவன் திருடி செல்ல, அதை மீட்கும் போது சில சுவாரஸ்ய விடயங்களும் காட்டப்படுகிறது.

இதை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் கடவுள் நம்பிக்கையாக இருப்பதை ராமசாமி கண்டுபிடிக்கிறார். அதை வைத்து மக்களை ஏமாற்றி படம் ஆக்க நினைக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் படத்தை வைத்து வசதியாக வாழ்கிறார் ராமசாமி.

இவ்வாற நிலையில், அந்த ஊருக்கு தாசில்தார் ஒருவர் வந்து அங்கு ராமசாமி செய்யும் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து மிரட்டுகிறார்.

அத்துடன், அவர் ராமசாமியின் சொத்தில் பங்கு கற்க கேட்க, இறுதியில் ராமசாமி முழு சொத்தையும் கொடுத்தாரா? இல்லையா? தாசில்தாரை எப்படி கையாண்டார் ராமசாமி? உண்மை மக்களுக்கு தெரிய வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் நடித்த சந்தானத்தின் நகைச்சுவையும் புத்திசாலித்தனமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. கதைக்களமும் பின்னணி இசை என்பன படத்திற்கு பக்கபலமாக காணப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நகைச்சுவை ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

Advertisement

Advertisement