• May 20 2024

பிரபல இயக்குநருடன் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமன்னா- அடடே இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து  படவாய்ப்புக்கள் குறைந்ததைத் தொடர்ந்து வெப் சீரியல்களில் நடித்து வருகின்றார்.

இவர் தெலுங்கில் நடித்த 'That Is Mahalakshmi' படம் விரைவில் வெளிவர இருக்கின்றது. தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார்.இது தவிர மலையாள சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.


இந்த நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ளார்.அங்கு இயக்குநர் அருண் கோபியுடன் இணைந்து தமன்னா குருவாயூர் கோவிலுக்கு சென்று அங்கு கிருஷ்ணரை சாமி தரிசனம் செய்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.


மேலும்  நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ படத்தில் தமன்னா நடித்திருந்தார்.சஷாங்கா கோஷ் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement