• Sep 20 2024

'விக்ரம் ட்ரெய்லரில் முகத்தை மூடி வருபவர் சூர்யா தான்'- இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி பகபத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிகர் சூர்யா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ட்ரெய்லரில் நடிகர் சூர்யாவின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் ட்ரெய்லரில் முகத்தை மூடி வருபவரும், கையில் இருந்த கத்தியை எறிபவரும் சூர்யா தான் என்று கூறுகின்றனர். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement