இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இது அநேகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ஃபீனிக்ஸ் வீழான் திரைப்படம் நாளை ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுவின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மாபெரும் படமாக ரிலீசாக உள்ள கங்குவா படம் ரிலீஸ் அன்று விஜய் சேதுபதி எப்படி தனது மகன் சூர்யாவின் படம் ரிலீஸுக்கு ஒப்புக் கொண்டார் என சினிமா ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.
"
இந்நிலையில் திட்டமிட்டபடி நவம்பர் 14ம் தேதி ஃபீனிக்ஸ் வீழான் படம் ரிலீஸாகாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்சார்டு போர்டு பரிந்துரை செய்த கட்ஸுகளால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. கங்குவா ரிலீஸ் நேரத்தில் எதற்கு வம்பு என்று படக்குழு லேசாக நழுவியுள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Listen News!