• May 17 2024

ஷாருக் கான் படத்தில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய பிரபலம்- இந்த முரண்பாடு தான் காரணமாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படத்துக்கு ‘டங்கி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. மேலும் அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் இந்த படங்களை அடுத்து இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். அத்தோடு இந்த படத்தின் தலைப்பு ’டன்கி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே ஜி வி பிரகாஷ் குமார் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .

இந்நிலையில் சில நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் அமித் ராய் விலகியுள்ளார். விலகல் பற்றி பேசியுள்ள அவர் “ராஜ்குமார் ஹிரானிக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகளால் சுமூகமாக நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். நான் பணியாற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement