தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிளாக் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான சண் பிக்சர் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்கான தேதி தற்போது படக்குழுவினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகார்ஜுனா ,சத்யராஜ் ,சுருதிகாசன் ,பூஜா ஹெட்ஜ் ஆகியோர் நடித்துள்ளார். இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன் படத்தினை ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே ஒரு பரபரப்பாக பரவியுள்ளது குறிப்பாக லோகேஷ் கனகராஜின் மீதான நம்பிக்கை இந்த படத்தை மேலும் பிரபலமாக்கியுள்ளது.மேலும் ‘கூலி’ படம் பற்றிய முதல் டிரெய்லர் மற்றும் பல முக்கிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Listen News!