• May 20 2024

உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘தலைவர் 169’படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிரூத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மேலும், இப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வருடாந்த உடல்நலப் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்று வருவதும் அமெரிக்காவில் உள்ள தனது பழைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்து அவரது நேரத்தை செலவிடுவதும் தெரிந்ததே.

அந்த வகையில், இவர் விரைவில் செல்லவுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லும் போதெல்லாம் அவரது புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement