ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் இன்று அந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு இந்த படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும், இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு திரைப்படம் சிறப்பு தோற்றத்தில் நடித்தது போல் எனக்கும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோட்டத்தில் நடித்த தாருங்கள் என ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கேட்டதாகவும் அதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’கோச்சடையான்’ திரைப்படத்தில் மோஷன் பிக்சருக்காக ரஜினி சில நாட்கள் நடித்துக் கொடுத்தார். அதன் பின் தனுஷ் நடித்த ’விஐபி 2’ என்ற படத்தை சௌந்தர்யா இயக்கிய நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ் தாணு அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் 10 நாட்கள் கால் சீட் தருவதாக ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் எனவே 30 முதல் 40 நிமிட காட்சிகளில் ரஜினிகாந்த் இந்த படத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!