தமிழ் சினிமாவில் மிகவும் பாராட்டப்பட்ட காமெடி கூட்டணிகளில் ஒன்று, இயக்குநர் சுந்தர். C மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேல் இணைந்து வெளிவந்த படங்கள். இந்த இருவரும் இணைந்து செய்யும் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம். அத்தகைய அழகு சேர்க்கும் தரமான திரைப்படங்களை ரசிகர்களும் பாராட்டுகின்றனர். தற்போது, சுந்தர். C மற்றும் வடிவேல் கூட்டணி பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்தகவலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுந்தர். C மற்றும் வடிவேல் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சுந்தர்.சி மற்றும் வடிவேல் இணைந்து பல வெற்றிப் படங்களை திரையுலகிற்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக, வின்னர், கிரி மற்றும் லண்டன் போன்ற படங்களில் வடிவேலுவின் நகைச்சுவையை பார்த்து அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
இத்தகைய வெற்றி படங்களை தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சூப்பர் ஹிட் கூட்டணி திரும்ப இணைவதனால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அத்துடன் பல வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து கொள்வதால் ரசிகர்களுக்கு சிறப்பான நகைச்சுவை கதையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் கேங்ஸ்டர் படம், அவரின் பழைய வெற்றிப் படங்களை மீண்டும் நினைவுபடுத்தும் அளவிற்கு இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
Listen News!