• May 13 2024

ரஜினி பட பழம் பெரும் தயாரிப்பாளர் ஒருவர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் எந்த ஒரு டெக்னலாஜியும் இல்லாமல் சிறப்பான காட்சிகளை வெளிப்படுத்திய பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவ்வாறான பல படங்களை பல முன்னணி நடிகர்களை வைத்து தயாரித்தவர் தான் இ.வி.ராஜன்.

இவர்  எம்.ஜி.ஆர். நடித்த வெளியான" குமரிப் பெண்" , சிவாஜி நடித்த " தங்கச்சுரங்கம்" , ரஜினி நடித்த " குப்பத்து ராஜா" அர்ஜூன் நடித்த " கல்யாண கச்சேரி" மற்றும் " சட்டம் சிரிக்கிறது" உள்ளிட்ட சுமார் 15 படங்களை தன்னுடைய இ.வி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர்.


83 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இவர் பிரபல திரை நட்சத்திரம் ஈ.வி.சரோஜாவின் சகோதரராவார். பிரபல இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மைத்துனராவார். 


இவரது இறுதி சடங்கு நாளை மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளதால் உடல் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement