• Apr 28 2024

இன்றுடன் முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியலில் இப்படி ஒரு டுவிஸ்டா?- சோகத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். இப்படிடியாரு நிலையில் இந்த சீரியல் தற்பொழுது இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.


 இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய கையோடு சினேகன் இருவரிடமும் உறுதிமொழி பேச வைக்கிறார்.அடுத்து ஷிவின், ஷர்மிளா உள்ளிட்டோர் வருகை தந்து பாரதி குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதன் பிறகு எல்லோரும் சாப்பாட்டிற்காக காத்துக் கொண்டிருக்க சௌந்தர்யா யார் சமைக்கிறாங்க? சமையல் வேலை முடிந்ததா இல்லையா என கேட்க அவர்கள் எல்லாம் கணேசனும் தாமரை அக்காவும் பாத்துக்குறாங்க என சொல்ல அப்போது இருவரும் வர சௌந்தர்யா சமையல் பற்றி கேட்க சென்னையில் இருந்து வந்து சமைக்கிறார்கள் என சொல்லி பாக்கியா மற்றும் செல்வியை அறிமுகம் செய்ய பிறகு சாப்பாட்டை அனைவருக்கும் பரிமாறுகின்றனர்.


அதன் பிறகு பாரதியும் கண்ணம்மாவும் மாறி மாறி ஊட்டி கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா பாடல் ஒலிக்க பழைய காட்சிகள் மீண்டும் ஒளிபரப்புவதுடன் சுபம் போட்டு பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 குறித்த ப்ரோமோ வீடியோ வெளியானது.

இதனால் பாரதி கண்ணம்மா சீசன் 2 எப்படியான ஜானரில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றனர். இருப்பினும் இந்த சீசனை மிஸ் செய்வதாகக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement