• May 22 2024

நடிகர் விஜய் மற்றும் திரிஷா இடையில் இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா... லியோ ரிலீஸ் குறித்து நடிகை திரிஷா பகிர்ந்த புகைப்படங்கள்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யுடன் மீண்டும் ஜோடியாக நடித்துள்ள நடிகை திரிஷா தற்போது "லியோ" ரிலீஸ் ஆகா உள்ள  நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் திரைப்படம் தொடர்பான படங்களை பகிர்ந்துள்ளார். 


சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவின் போது மேடையில் நடிகை திரிஷா, நடிகர் விஜய்யுடன் நான்கு படங்கள் நடித்துவிட்டேன். அந்த 4 படம் மாதிரி லியோ இருக்காது; இது வித்தியாசமா இருக்கும். அதே சமயம் அந்த கெமிஸ்ட்ரி மாறாமல் இருக்கும் என்று கூறி இருந்தார். அதேபோல லியோ திரைப்படத்தில்  சமீபத்தில் வெளியான ஒரு பாடலில் அவர்களின் கெமிஸ்ட்ரி மாறாமல் தான் இருக்கிறது.


எதிர் வரும் 19 திகதி ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்திற்க்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது போல நடிகை திரிஷாவும் நடிகர் விஜய்யுடன் இருக்கும் லியோ புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து ரெடியா என்று போஸ்ட் செய்துள்ளார். 

இதோ அந்த அழகிய புகை படங்கள்..


Advertisement

Advertisement