• Jun 18 2024

2ஆம் திருமணத்திற்கு பின்னரும் முதல் கணவரின் பெயர் ஏன்? சீரியல் நடிகை ஸ்ரித்திகா விளக்கம்..!

Sivalingam / 3 days ago

Advertisement

Listen News!

'நாதஸ்வரம்’ உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டாம் திருமணத்திற்கு பின்னரும் தனது பெயரின் பின்னால் முதல் கணவரின் பெயர் இருப்பது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

’நாதஸ்வரம்’ சீரியலில் மலர் என்ற கேரக்டரின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஸ்ரித்திகா  அதன் பின்னர் குலதெய்வம், என் இனிய தோழி, கல்யாணமாம் கல்யாணம், கல்யாண பரிசு, மகராசி போன்ற சீரியலில் நடித்தார்.

’மகராசி’ சீரியலில் நடிக்கும் போது தான் ஸ்ரித்திகாவுக்கும் அதே தொடரில் நடித்த ஆர்யன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

ஸ்ரித்திகா ஏற்கனவே  சனேஷ் திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது அவர் இரண்டாம் திருமணத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதே போல் சனேஷும் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் இருவரும் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம், எங்களது முந்தைய வாழ்க்கையை பற்றி யோசிக்க விரும்பவில்லை, கடந்த  கால வாழ்க்கையை பற்றி யாரையும் குறை சொல்லவில்லை, எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது, அதன் பின் ஒரு புரிதல் ஏற்பட்டதால் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம், விரைவில் திருமண புகைப்படத்தை வெளியிடுவோம்’ என்று ஸ்ரித்திகா தெரிவித்தார்.

இந்த நிலையில் இரண்டாம் திருமணத்திற்கு பின்னரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் கணவரின் பெயரான சனேஷ் என்பது தான் இருக்கிறது என கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன ஸ்ரித்திகா ’இன்ஸ்டாகிராமில் பெயரை மாற்றுவதில் சில டெக்னிக்கல் பிரச்சினை இருப்பதாகவும், அதனை உடனே சரி செய்ய முடியவில்லை என்றும், ஆனால் அதை சரி செய்யும் முயற்சி செய்து வருவதாகவும், விரைவில் அந்தப் பெயர் மாற்றப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement