• Jun 21 2024

சூர்யாவுக்கும் அரசியல் ஆசை துளிவிட்டதா? விஜய்க்கு போட்டியாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டி?

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் பின்னடைவில் அரசியல் தலைமைகளாக உருமாறி விடுகின்றார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா தொடங்கி தற்போது உதயநிதி, கமல், விஜய் என்று அரசியல் ஆசை எப்போது யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது.

சினிமாத்துறையில் ஆரம்பத்தில் அரசியலா என பின்வாங்கியவர்கள் எல்லாம் இன்று அரசியல் களத்தில் இறங்கி ஆட்சி செய்து வருகின்றார்கள். உதாரணத்திற்கு தமிழக அமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிக்க வந்த போது நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என பேசி இருப்பார். ஆனால் இன்று அவர் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.

அதேபோலத்தான் நடிகர் விஜயும். நான் எல்லாம் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஆரம்பத்தில் பேசி வந்தார். ஆனால் தற்போது அரசியல் கட்சியை தொடங்கியது மட்டும் இல்லாமல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


இந்த நிலையில், தான் நடிகர் சூர்யாவுக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா, அகரம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். அதில் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இது தவிர சூர்யாவின் ரசிகர் மன்றத்தின் சார்பிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கிராமப்புறங்களில் உள்ள தமது இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நமது நிர்வாகிகள் களமிறங்க வேண்டும், அதற்கு அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆனாலும் அரசியல் என்றாலே பிரச்சினைகள் வரும் என சூர்யா யோசிக்க, அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இப்போதைக்கு ஆதரவு வேண்டாம். உங்கள் புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தல் நிக்க மட்டும் அனுமதி கொடுங்கள் எனக் கேட்டுள்ளார்கள்.

இதனால் தான் ஆலோசித்து விட்டு சூர்யா ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. அதற்கான அறிவுறுத்தலும் விரைவில் வெளியீட  உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement