• May 17 2026

'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவலை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் இப்படம் உருவாகி உலகளவில் கவனம் பெற்றது.


இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரிஷ்யம் 3 திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்திலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த படம், வரும் மே 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


Advertisement

Advertisement