• Jun 07 2026

கிறுக்குத்தனமாக போஸ் கொடுத்த சௌந்தர்யா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்துகொண்டு இறுதியில் ரன்னராக வந்தவர்தான் சௌந்தர்யா. அந்த சீசனில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருடைய தைரியமான பேச்சுகளும், விமர்சனங்களை எதிர்கொண்ட விதமும், தனது குரல் காரணமாக வாழ்க்கையில் பல இடங்களில் ஏற்பட்ட அவமானங்களை பகிர்ந்துகொண்டதும் பலரையும் கலங்க வைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே தனது நண்பர் விஷ்ணுவை லவ் ப்ரொபோஸ் செய்து மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தார். விஷ்ணுவும் சௌந்தர்யாவின் காதலை ஏற்றுக்கொண்டார்.


இதைத் தொடர்ந்து திருமண அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சௌந்தர்யாவும் விஷ்ணுவும் இணைந்து சென்னையில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றை தொடங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வியாபாரத்தில் அனுபவம் இருப்பதால் இது நல்ல முயற்சியாக பாராட்டப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் சௌந்தர்யா தனது தனிப்பட்ட புகைப்படங்களையும் விளம்பர புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் சௌந்தர்யா கருப்பு நிற ஆடையில் எடுத்துகொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கொடுத்துள்ள வித்தியாசமான போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Advertisement

Advertisement