• Apr 07 2026

நெகட்டிவ் விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய 'ஹாப்பி ராஜ்'.. 2 நாள் கலெக்ஷன் இதோ.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌரி பிரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. 

வெளியீட்டிற்கு பிறகு இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கதைக்களம் மற்றும் திரைக்கதை குறித்து சில விமர்சகர்கள் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டிருந்தாலும், இளைஞர்களை கவரும் சில அம்சங்கள் படத்தில் இருப்பதாகவும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.


விமர்சனங்கள் ஒரு பக்கம் இப்படத்தின் வசூலுக்கு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு ஒரு நிலையான வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மற்றும் இசை ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய இயக்குநரின் படமாக இருந்தாலும், இப்படம் ஆரம்ப கட்டத்தில் நல்ல வசூல் நிலையை பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. வார இறுதி நாட்களில் மேலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதால், வசூல் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement