• Dec 28 2024

" வில் யூ மேரி மீ? "..! வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்த சவுந்தர்யா! மலரும் புதிய காதல்!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியில் இன்று சூப்பரான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் என்றியான பிரபலத்திற்கு சவுந்தர்யா ப்ரொபோஸ் செய்வது போல முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது அது தொடர்பாக பார்ப்போம். 


பிக் பாஸ் வீட்டில் இந்த முறை பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து அவர்களை சந்தித்து செல்கிறார்கள். இப்படி இருக்க இன்று பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர் விஷ்ணு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். விஷுனு மற்றும் சவுந்தர்யா நல்ல நண்பர்கள் என்பது அணைவருக்கும் தெரிந்த விடையம் தான் இப்படி இருக்க சவுந்தர்யா செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.


வீட்டுக்கு வந்த விஷ்ணுவிடம் " வில் யூ மேரி மீ? " என்று ஒரு தட்டில் எழுதி ப்ரொபோஸ் செய்கிறார் சவுந்தர்யா. இதனை பார்த்து போட்டியாளர்கள் உட்பட அனைவரும் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லி அதிர்ச்சியாகி கைதட்டுகிறார்கள். விஷ்ணு அதிர்ச்சியில் "எனக்கு இப்படி நடந்தது இல்லை,  எனக்கும் உன்னை ரொம்ப புடிக்கும் நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரன்ஸ். நான் சப்ரைஸ் பண்ணலாம்னு வந்தே நீங்க பண்ணுறீங்க இது பிரேக் ஆகிட்டா என்ன செய்றது நான்" என்று சொல்லி சிரிக்கிறார். 


பின்னர் சவுந்தர்யா- விஷுனு இருவரும் அழகாக ஒரு டான்ஸ் ஆடுகிறார்கள் போட்டியாளர்கள் விசில் அடித்து என்ஜோய் பண்ணுகிறார்கள் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.     

Advertisement

Advertisement