• Sep 13 2024

தல தோனிக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்லையே? சூரியை பார்த்தவுடன் ரசிகர்கள் ரியாக்சன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக வென்ற நிலையில் இந்த போட்டியை பார்க்க முதல் முறையாக நடிகர் சூரி வந்திருந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தாலே உடனே தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் நேரில் போட்டியை பார்க்க வந்து விடுவார்கள் என்பதும், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சிஎஸ்கேவுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நேற்றைய போட்டியை பார்க்க நடிகை வரலட்சுமி உட்பட பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்த நிலையில் நடிகர் சூரியும் வருகை தந்துள்ளார். அவர் முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வந்ததாக கூறியுள்ள நிலையில் அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை நோக்கி கையை செய்தனர். தல தோனிக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்று கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் இது குறித்து சூரி தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:

முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்

Fantastic Atmosphere

அற்புதமான ரசிகர்கள்

சென்னை என்றாலே தனி கெத்து தான்

நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்



Advertisement

Advertisement