• Jan 18 2025

தேவையா இந்த அலப்பறை.. பெரிய நடிகைகளே சிம்பிளா நடத்துறாங்க.. இந்திராஜாவுக்கு குவியும் கண்டனங்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் பெரிய நடிகைகளே தங்கள் திருமணத்தை சிம்பிளாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில படங்களில் துக்கடா கேரக்டரில் நடித்த இந்திரஜா தனது திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியது மட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் வீடியோவை பார்க்கும் போது எரிச்சலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

‘பிகில்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் ’விருமன்’ படத்தில் நாயகியின் தோழியாகவும் நடித்த இந்திரஜா சமீபத்தில் தனது உறவினரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடும் உரிமையை ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலுக்கு மட்டும் ஒரு பெரும் தொகைக்கு விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த உரிமையை வாங்கிய நிறுவனம் தங்களைத் தவிர வேறு யாராவது அந்த வீடியோவை, புகைப்படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில் ஒரு வழியாக திருமணம் நடந்த முடிந்த நிலையில் தற்போது இந்திரஜா தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது குடும்பத்துடன் செய்யும் அலப்பறையை தாங்க முடியவில்லை என கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய நடிகைகளில் ஒருவரான டாப்சி சமீபத்தில் மிகவும் சிம்பிளாக திருமணத்தை நடத்தினார் என்பதும் அவரது திருமண புகைப்படம் கூட வெளியே வரவில்லை என்பதும் அந்த அளவுக்கு அவர் எளிமையாக திருமணத்தை நடத்திய நிலையில் இந்திரஜா போன்றோர் ஏன் இந்த ஆடம்பரத்தை விரும்புகின்றனர் என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. திருமணம் என்பது நம் குடும்பத்தினர் மட்டும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்ற நிலையில் இதை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி இந்த விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டுமா என்று கூறப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement